;
Athirady Tamil News

வலி.வடக்கு காணி­கள் அழுத்­தங்­க­ளா­லேயே விடுவிப்பு- சரா எம்.பி. சுட்­டிக்­காட்டு..!!

0

எமது மக்­கள் நடத்­திய போராட்­டங்­க­ளாலும், அர­சி­யல் தலைமை கொடுக்­கும் தொடர்ச்­சி­யான அழுத்­தத் தாலுமே­ ராணு­வத்­தி­ன­ரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மக்­க­ளின் காணி­க­ளில் சில பகு­தி­கள் விடு­விக்­கப்­ப­டு­கின்றன. இந்த விடு­விப்­புக்­கள் தொடர் அழுத்­தங்­கள் கார­ண­மாக பல்­வேறு இழு­ப­றி­க­ளு­டன் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

மக்­க­ளின் சொத்­துக்­கள் என்ற நியா­யத்­தி­னால் தாம­கவே ராணு­வம் மேற்­கொள்­ள­வில்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

வலி.வடக்­கில் 683 ஏக்­கர் எமது மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­ப­டு­வதை நாம் மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்­கின்­றோம். இரா­ணு­வத் தள­ப­தி­யால் அது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட சில கருத்­துக்­கள் நகைப்­புக்­கு­ரி­யா­தா­க­வும் உண்­மைக்­குப் புறம்­பா­ன­தா­க­வும் எம்மை கோப­மூட்­டு­வ­ன­வா­க­வும் இருப்­பதை சுட்­டிக்­காட்­டாது இருக்க முடி­யாது.

வன்­மை­யான கண்­ட­னம்
எமது காணி­களை 28 ஆண்­டு­கள் அப­க­ரித்து – ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்து விட்டு மீள எங்­க­ளி­டம் கைய­ளிப்­பதை புத்­தாண்­டுப் பரி­சாக வழங்­கு­வ­தாக சித்­த­ரிப்­பது நிச்­ச­ய­மாக ஒரு மேலா­திக்க நிலை­யி­லி­ருந்து எம்மை இழி­வு­ப­டுத்­தும் வகை­யில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட கூற்று என்ற கார­ணத்­தால் அதை நான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றேன்.

இந்­தக் காணி­கள் எமது மக்­க­ளின் பரம்­ப­ரைச் சொத்­துக்­கள். ஒவ்­வொரு காணித் துண்­டும் எமது மக்­க­ளின் சொத்து என்­ப­தற்­கும் வேறு எவ­ரும் உரிமை கொண்­டாட முடி­யாது என்­ப­தற்­கும் சட்ட பூர்வ ஆவ­னங்­க­ளாக காணி உறு­தி­கள் உண்டு.

விவ­சாய உற்­பத்­தி­க­ளுக்கு பொருத்­த­மான இந்த மண்­ணில் ­தான் எமது மக்­கள் விவ­சா­யம் செய்து வள­மான வாழ்வு வாழ்ந்­தார்­கள். ஒரு காலத்­தில் மயி­லிட்­டி­யில் உற்­பத்­தி­யா­கும் கட­லு­ணவு கொழும்­புச் சந்­தை­யில் 60 சத­வீ­தம் நிறைவு செய்­தது. போர் கார­ணம் காட்­டப்­பட்டு எமது மக்­கள் அந்த மண்­ணி­லி­ருந்து விரட்­டப்­பட்­ட­னர்.

எமது பரம்­ப­ரைப் பூமி­யும் கட­லும் படை­யி­ன­ரால் அப­க­ரிக்­கப்­பட்ட நிலை­யில் எமது மக்­கள் தங்­கள் குடி­யி­ருப்­புக்­க­ளை­யும் வாழ்­வா­தா­ரங்­க­ளை­யும் இழந்து ஏதிலி முகாம்­க­ளி­லும் உற­வி­னர் வீடு­க­ளி­லும் தஞ்­ச­ம­டைந்­த­னர்.

மாயை உரு­வாக்­கம்
காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்டி எமது மக்­கள் நடத்­திய போராட்­டங்­களை, இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும், ஒட்­டுக் குழுக்­க­ளும் இணைந்து நடத்­திய மக்­கள் மீது மேற்­கொண்ட வன்­மு­றை­கள் இல­கு­வில் மறந்து விடக்­கூ­டி­யவை அல்ல.

இப்­ப­டி­யான ஒரு சூழ்­நி­லை­யில்­தான் இரா­ணு­வத் தள­பதி தங்­க­ளது சொத்தை கருணை கூர்ந்து எங்­க­ளுக்கு வழங்­கு­வது போன்ற ஒரு தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் முக­மாக காணி விடு­விப்­பா­னது எமது மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் புத்­தாண்­டுப் பரிசு என்று தெரி­வித்­துள்­ளார்.

இந்­தக் காணி­கள் எமது மக்­கள் பூர்­விக சொத்து. பரம்­பரை பரம்­பi­யாக வாழ்ந்து தொழில் செய்து வள­மான வாழ்வு கண்ட எமது சொத்தை எமக்கு யாரும் பரி­சாக வழங்­க­மு­டி­யாது. இவர்­கள் தாங்­க­ளாக வெளி­யே­ற­வில்லை. தவிர்க்க முடி­யாத சந்­தர்ப்­பங்­கள் கார­ண­மா­கவே வெளி­யே­று­கின்­ற­னர் என்ற போதி­லும் கருணை கொண்டு காணி­களை அன்­ப­ளிப்­புச் செய்­வ­தாக ஒரு மாயையை ஏற்­ப­டுத்த முனை­கின்­ற­னர்.

காணா­மற்­போ­னோர் விட­யத்­தில் கருணை இல்­லையா ?
அப்­ப­டி­யா­ன­தொரு கருணை உள்­ளம் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தால் ஏன் காணா­மற் போனோர் விவ­கா­ரத்­தில் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.காணா­மற் போகச் செய்­யப்­பட்­டோர், உற­வு­கள் முன்­னி­லை­யி­லேயே படை­யி­ன­ரி­டம் அவர்­களை ஒப்­ப­டைத்­த­னர்.

வீடு­க­ளி­லும், முகாம்­க­ளி­லும் படைப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும், ஒட்­டுக் குழு­வி­ன­ரும் இணைந்தே அவர்­க­ளைப் பிடித்­துச் சென்­ற­னர். காண­மாற் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது படை­யி­ன­ருக்கு தெரி­யா­மல் இருக்­க­மு­டி­யாது. அவர்­க­ளின் உற­வு­கள் நல்­லி­ணக்க ஆணைக்­குழு, பர­ண­கம ஆணைக்­கு­ழு­வில் சாட்சி அளித்­த­னர்.

எது­வுமே பய­னற்று போன நிலை­யில் தற்­ச­ம­யம் 400 நாள்­க­ளுக்கு மேலாக உற­வி­னர்­கள் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். அரசோ காணா­மற் போனோர் அலு­வ­ல­கம் எனச் சொல்லி காலத்தை இழுத்­த­டித்து வரு­கி­றது.

நீதி­யான, நியா­ய­மான இரா­ணு­வம் என்­றால் தங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட, தங்­க­ளால் பிடித்து செல்­லப்­பட்ட காணா­மற் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­வித்­தி­ருக்க வேண்­டும். புத்­தாண்­டுப் பரி­சாக காணியை விடு­விப்­ப­தா­கக் கூறும் இவர்­கள் வெசாக் பரி­சாக காணா­மற்­போ­னோர் தொடர்­பான உண்­மை­களை வெளி­யி­டு­வார்­களா? என்­பதை இரா­ணு­வத் தள­ப­தி­யி­டம் கேட்டு வைக்க விரும்­பு­கி­றேன்.

அர­சி­யல் கைதி­கள்

பிடித்த காணி­களை மனம் இரங்­கித்­தான் விடு­விக்­கி­றார்­கள் என்­றால் பிடித்­துப் பல ஆண்­டு­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் அர­சி­யல் கைதி­க­ளைக் கருணை கொண்டு விடு­விப்­பார்­களா?

அதே­வே­ளை­யில் இலங்­கை­யின் போர்க் குற்­றங்­கள் தொடர்­பாக விசா­ரிக்க பன்­னாட்டு நீதி­ப­தி­கள் தேவை­யில்லை என­வும், இலங்­கை­யி­லேயே அதைச் செய்­யும் ஆற்­றல் உள்­ள­வர்­கள் இருக்­கி­றார்­கள் என்­றும் இரா­ணு­வத் தள­பதி கூறு­கின்­றார்.

காணி­களை 28 ஆண்­டு­க­ளாக அப­க­ரித்து வைத்­தி­ருப்­ப­வர்­கள் காணா­மற் போகச் செய்­யப்­பட்­டோர் தொடர்­பாக உண்­மை­களை வெளிப்­ப­டுத்­தா­த­வர்­கள், பல ஆண்­டு­க­ளாக அர­சி­யல் கைதி­களை தடுத்து வைத்­தி­ருப்­ப­வர்­கள், அவர்­களை சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு பெறப்­பட்ட ஒப்­பு­தல் வாக்கு மூலத்­தின் அடிப்­ப­டை­யில் 100 ஆண்­டு­கள், 200 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிப்­ப­வர்­கள் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக நியா­ய­மான விசா­ர­ணையை நடாத்­து­வார்­களா?

காணி விடு­விப்பு, காணா­மற் போனோர் விவ­கா­ரம் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை என்­பன தொடர் போராட்­டங்­கள் மூல­மா­க­வும், பன்­னாட்டு அழுத்­தங்­கள் கார­ண­மா­க­வும் சாத்­தி­ய­மா­குமே ஒழிய நிச்­ச­ய­மாக அரசோ, இரா­ணு­வமோ மனம் திருந்தி மேற்­கொள்­ளப் போவ­தில்லை என்­பதை திட்­ட­வட்­ட­மாக தெரி­விக்­கின்­றேன் – என்­றுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + five =

*