;
Athirady Tamil News

இறந்து போய் மிதந்து வந்த சுறாவிற்கு பிரசவம் பார்த்த மீனவர்! வைரல் வீடியோ..!!

0

அவுஸ்திரேலியாவில் மீனவர் ஒருவர் இறந்துபோன சுறா மீனின் வயிற்றில் இருந்து 92 குட்டி சுறாக்களை வெளியே எடுத்துள்ளார்.

Mathew Orlov(46) என்ற மீனவர், அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா கடற்கரையில் வழக்கம்போல தனது படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது, மற்ற சுறாக்களால் தாக்கப்பட்டு இறந்து போன நிலையில் மிதந்து வந்த கர்ப்பிணி சுறா ஒன்று மேத்திவ் படகின் மீது மோதியுள்ளது.

அதைக் கண்ட, மேத்திவ் சுறாவின் வயிற்று பகுதியில் துடிப்பு இருப்பதை கண்டுள்ளார்.இதனால் சுறாவை படகில் வைத்து, அதன் வயிற்றை கிழித்து பார்த்த போது, 92 குட்டி சுறாக்கள் இருந்துள்ளது.

அதை எடுத்து, அப்படியே கடலில் விட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து Mathew கூறியதாவது, எனக்கு கடல்வாழ் உயிரினங்கள் என்றால் மிகவும் பிடிக்கும், அவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

நான் இதற்கு முன்னர் இதுபோன்று சிகிச்சையை செய்ததில்லை, சுறாவின் வயிற்றில் குட்டிகள் இருப்பதை அறிந்துகொண்டு படகில் வைத்தே அதன் வயிற்றில் இருந்த குட்டிகளை வெளியில் எடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 4 =

*