;
Athirady Tamil News

புத்தாண்டு தினத்தில், யாழில் பயங்கரம்: இரு இளைஞர்கள் படுகாயம்..!

0


சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்றுச் சனிக்கிழமை(15) யாழ். பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற கோடரிவெட்டுச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று மாலை வடமராட்சி செல்வச் சந்நிதி ஆலயத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த இளைஞர்களை இடைமறித்த இனம் தெரியாத குழு கோடாரியால் சரமாரியாக வெட்டியதில் இருவர் தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியாசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மீசாலை வடக்கைச் சேர்ந்த சி. சிறிப்பிரபு(வயது-27) மற்றும் மாந்துவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த துரைமணி சயிந்தன்(வயது-27) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − three =

*