;
Athirady Tamil News

ஒரே குடும்பத்தில் 3 பேரை உயிருடன் புதைத்த வழக்கு: 9 பேருக்கு மரண தண்டனை..!

0


ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கிடும் கிராமத்தை சேர்ந்தவர் அசினா சபர் (வயது 48). இவருடைய குடும்பத்தினர் பில்லிசூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி ஒரு கும்பல், அவரது வீட்டுக்குள் புகுந்தது.

அசினா சபரையும், அவருடைய மனைவி அம்பே (40), மூத்த மகள் அஸ்மனி (26) ஆகியோரையும் வீட்டில் இருந்து இழுத்துச் சென்றது.

சரமாரியாக தாக்கியதில், 3 பேரும் மயங்கி விழுந்தனர். பிறகு 3 பேரையும் உயிருடன் சுடுகாட்டில் புதைத்தனர்.

இதை நேரில் பார்த்த அசினா சபரின் இளைய மகள் மாலதி புகாரின்பேரில், 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராயகடாவில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.

நீதிபதி சுபேந்து குமார் பதி, 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக 9 பேரின் வக்கீல் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 13 =

*