இந்திய நாணயப் பரிமாற்றத்தை, கண்காணிப்புப் பட்டியலில் வைத்த அமெரிக்கா..!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.
இதனையடுத்து அமெரிக்க பொருட்களுக்கு சீனா 60 சதவீதம் வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளிடையேயான வர்த்தகத்தில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணய நடவடிக்கைகளை அமெரிக்கா கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்தது.
இதனையடுத்து இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது.
இந்தியாவின் நாணய நடவடிக்கைகளையும், இந்த பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது.
இதனால் இருநாடுகளுக்கு இடையியே வர்த்தக செயலாக்கங்கள் மேம்படும் என்றும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.
பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கியுள்ள நிலையில் இது சீனாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.