;
Athirady Tamil News

முல்லைத்தீவில் போராடுவோருக்கு இனிப்புகள் வழங்கிய படையினர்..!!

0

உய­ர­தி­கா­ரி­கள் முடி­வெ­டுத்துக் காணி­களை விடு­விக்­கு­மாறு எப்­போது கூறு­கி­றார்களோ அப்­போது சந்­தோ­ச­மா­கக் காணி­களை விடு­விப்­போம். அவர்­கள் முடி­வெ­டுக்­கா­த­ வரை தாங்­கள் ஒன்­றும் செய்­ய­ மு­டி­யாது” என்று இரா­ணு­வத்­தி­னர் கூறி­னர் என்று போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் தெரி­வித்­த­னர்.

புது­வ­ரு­ட­மான நேற்று இரா­ணு­வத்­தி­னர் இனிப்­புப் பண்­டங்­க­ளைத் தமக்கு வழங்கி அவர்­கள் புது­வ­ரு­டத்­தைக் கொண்­டா­டி­னர் என்­றும் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் தெரி­வித்­த­னர்.

தமது சொந்த நிலத்­தில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்­றித் தம்­மைக் குடி­ய­மர்த்­து­மாறு வலி­யு­றுத்­திக் கேப்­பா­பி­ல­வில் காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளான பொது­மக்­கள் போரா­டி­வ­ரு­கின்­ற­னர். அவர்­க­ளது போராட்­டம் இன்று 414ஆவது நாளா­க­வும் தொடர்­கி­றது.

அவர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த இடத்­துக்­குச் சென்று படை­யி­னர் இனிப்­புப் பண்­டங்­களை வழங்­கி­னர்.

அதன்­போது, “எங்­க­ளு­டைய நிலங்­களை விடு­வித்­தால் ­தான் நாங்­கள் புத்­தாண்­டைக் கொண்­டாட முடி­யும். மிக­வி­ரை­வில் நிலத்தை விடு­விக்க வேண்­டும்” என்று இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கோரி­னோம். அதன்­போது இரா­ணு­வத்­தி­னர் மேற்­கண்­ட­வாறு கூறி­னர் என்று போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் தெரி­வித்­த­னர்.

கேப்­பா­பி­ல­வில் மக்­கள் காணி­க­ளில் உள்ள படை­யி­னரை வெளி­யே­றக் கோரி அந்த நிலங்­க­ளுக்­குச் சொந்­த­மான மக்­கள் போராட்­டத்தை ஆரம்­பித்­த­னர்.

அந்­தப் போராட்­டம் அற­வ­ழிப் பேராட்­ட­மாக மாறி தொடர்ந்­து­ கொண்­டி­ருக்­கி­றது.

தமது கோரிக்­கை­யைத் தெளி­வாக முன்­வைத்­துள்ள அவர்­கள் அதை எட்­டும் வரை பண்­டி­கை­கள் அனைத்­தை­யும் கொண்­டா­டு­வ­தில்லை என்று முடி­வெ­டுத்­துள்­ள­னர். அவ்­வாறே நேற்­றைய புது­வ­ரு­டத்­தை­யும் அவர்­கள் புறக்­க­ணித்­தி­ருந்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 13 =

*