;
Athirady Tamil News

பாலியல் தொழிலை பவ்யமாக திணிக்கும் பேராசிரியை நிர்மலா, :பேராசிரியை நீக்கம்..! (VIDEO)

0


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதா? பேராசிரியை நீக்கம்

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுக்கு இத்தனை அழகாக கணக்கு சொல்லிக் கொடுத்திருப்பாரோ இல்லையோ, ஆனால் பாலியல் தொழிலை கனகச்சிதமாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் சொல்லி கொடுக்கும் ஆடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி.

இவர் சில மாணவிகளுக்கு போன் செய்து அவர்களை பல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு வருமாறு மிகவும் ஜாக்கிரதையாக அழைக்கிறார்.

அதாவது மாணவிகளிடம் நேரடியாக விஷயத்தை கூறவும் கூடாது, ஆனால் அவர்களாகவே விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நிர்மலா தேவி மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.

கல்வி போதிக்கும் ஆசிரியை இப்படி காமத்தை போதிக்கலாமா. வேலியே பயிரை மேயலாமா என நெட்டிசன்கள் பொங்குகின்றனர்.

மேலும் இத்தனை அழகாக பாலியல் தொழிலை போதிக்கும் இவர்கள் கல்வியை இந்த முறையில் போதித்திருந்தால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடம் இதுபோல் பேச வேண்டிய அவசியமே இல்லையே.

“நானும் ஏற்கெனவே போயிருக்கிறேன், அதனால் பயப்படாதீங்க” என்றும் நிர்மலா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளிடம் அழகாக பாலியல் கல்வியை போதிக்கும் அந்த ஆடியோவை நீங்களும் கேளுங்களேன்….

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/a-college-professor-teaches-invites-students-audio-goes-viral-317300.html

#ஆடியோ_ரிலீசு.. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி, கணித பேராசிரியர் திருமதி.நிர்மலதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல். பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்ணுக்கு மதிப்பெண்ணும் கிடைக்குமாம்.. பணமும் கிடைக்குமாம்.. இந்த இழி பிறவியின் முகத்தை தோலுரித்த நம் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை மனதார நம்புகிறோம். நீங்கள் தவறு செய்து இருந்தால் இந்த உரையாடலை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களாக உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தங்கைகளே.. (தங்கைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட இடங்கள் பீப் ஒலியால் mute செய்யப் பட்டுள்ளது)#அரண்கள்

Gepostet von அருப்புக்கோட்டை அரண்கள் am Freitag, 13. April 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 2 =

*