;
Athirady Tamil News

ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட, 3 லட்சம் கையொப்பங்கள் சமர்ப்பிப்பு!

0


ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட 3 லட்சம் கையொப்பங்கள் சமர்ப்பிப்பு!

தாயை இழந்து அநாதைகளாக்கப்பட்ட ஆனந்தசுதாகரனின் பள்ளிசெல் குழந்தைகளின் நலன்கருதி, ஆயுள்தண்டனைக் கைதியாக உள்ள ஆனந்தசுதாகரனை விடுதலைசெய்யக் கோரும் வடமாகாணத்து அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இட்ட 3லட்சம் கையொப்பங்களும், மகஜரும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், உலகத் தலைவர்களுக்கும் சென்றடையும் வகையில் செவ்வாய்க்கிழமை (17.04.2018) பகல் 12.30 மணிக்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரும், பதில் முதலமைச்சருமான கலாநிதி சர்வேஸ்வரன் முன்னிலையில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து அதிபர்களையும் ஆசிரியர்களையும் கல்விப்புலம்சார் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில்….

“பள்ளிசெல் பிள்ளைகளாக உள்ள ஆனந்தசுதாகரனின் குழந்தைகளைப் போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அநாதைகளாக்கப் பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்ததென்பது இன்னும் புதிராவே உள்ளது. இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகக் கூடாது என்பதற்காக, முதலில் ஆயுள் தண்டனை ஆனுபவிக்கும் ஆனந்தசுதாகரனை விடுவிக்குமாறு நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் 3லட்சம் கல்விப்புலம்சார் உறுப்பினர்களாகிய நாம் கையொப்பமிட்டுக் கேட்டுக் கொள்கின்றோம்”.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 14 =

*