;
Athirady Tamil News

வவுனியாவில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர், வைத்தியசாலையில் அனுமதி!!

0


வவுனியாவில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 4 இல் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2018) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த சிதம்பரபுரம் கற்குளம் படிவம் -4 ஜ சேர்ந்த சசிகுமார் தியாகரட்னம் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபபட்டுள்ளார்.

புத்தாண்ட தினத்தில் இருவருக்கிடையே இடம்பெற்ற கருத்து முரன்பாடே கத்திக்குத்து சம்பவத்திற்கு காரணமேன தெரிவிக்கும் பொலிசார் தாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் வவுனியா ஆசிக்குளம் பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய சிங்கhரம் கனகரத்தினம் என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 4 =

*