நிறைவடைந்தது காமன்வெல்த் 2018 கொண்டாட்டம்.. பதக்க பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம்..!

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து வந்த காமன்வெல்த் போட்டிகள் தற்போது நிறைவு பெற்று இருக்கிறது.
இந்த காமென்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில் இருக்கும் ”கர்ராரா” மைதானத்தில் நடந்து முடிந்து இருக்கிறது.
இதற்காக மிகவும் பிரமாண்டமாக ஸ்டேடியம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்தியாவில் இருந்து இந்த முறை 225 வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்திய இதில் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறது.
பதக்கம்
பதக்க பட்டியலில் இந்தியா 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா எப்போதும் முதலிடத்தில் போல 198 பதக்கங்கள் வென்றுள்ளது.
இங்கிலாந்து 136 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
இந்திய வீரர்களின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதில் எவ்வளவு பதக்கம்
இந்தியா பளுதூக்குதலில் 9, துப்பாக்கி சுடுதல் 16, டேபிள் டென்னிஸ் 8, பேட்மிட்டன் 6, பவர்லிப்டிங் 1, அதலிட்டிக்ஸ் 3, மல்யுத்தம் 12 , பாக்சிங் 9, ஸ்குவாஷ் 2 ஆகிய பிரிவுகளில் பதக்கம் வாங்கி இருக்கிறது.
தடகளம் பிரிவில்தான் இந்தியா மிக முக்கியமாக குறைவாக பதக்கம் வாங்கியுள்ளது.
கடைசி நேர கெத்து
இந்தியாவின் பேட்மிட்டன் குழு மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளது.
சாய்னா நேவால், சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் என்று அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றுள்ளனர்.
பாட்மிட்டன் பிரிவில் 2 தங்கம் உட்பட ஆறு பதக்கம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு
அதேபோல் இதில் தமிழ்நாடு வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.
ஜோஷுவா சின்னப்பா, தீபிகா பல்லீகல் ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
பளுதூக்குதலில் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கம் வென்றார்.
காமன்வெல்த்தில் இவர் வெல்லும் மூன்றாவதுதங்கம் ஆகும் இது.