;
Athirady Tamil News

பெங்களூரை பந்தாடிய சஞ்சு சாம்சன்.. 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்..!

0


ஐபிஎல் தொடரில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது.

இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி அதிரடியாக 217 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 7வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

இந்த முறையாவது கோஹ்லி தலைமையிலான அணி கோப்பை வெல்ல முடிவெடுத்துள்ளது.

இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் தோல்வி அடைந்து இருக்கிறது. இதனால் இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த போட்டி தற்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ராஜஸ்தான் அணியில் பழைய வீரர்களே அணியில் இடம்பெற்றுள்ளனர். பெங்களூர் அணியில் சர்ப்ராஸ் கானுக்கு பதில் பவான் நெஹி இடம்பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்து வீச முடிவெடுத்தது.

முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி அதிரடியாக 217 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் அதிரடியாக 45 பந்தில் 92 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில் 10 சிக்ஸ், 2 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரஹானே 20 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.

பெங்களூர் அணியில் சாஹல் கிறிஸ் வோக்ஸ் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

தற்போது இமாலய இலக்கை நோக்கி பெங்களூர் விளையாடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 2 =

*