;
Athirady Tamil News

அரசியல் கைதியின் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படவில்லை: கஜேந்திரன் ஆதங்கம்..!!

0

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி இ.தவரூபன் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படாமல் அவர் இன்றளவும் சந்தேக நபராகவே உள்ளார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘முன்னர் ஒருமுறை யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டபோது தப்பிக்க முயன்றார் எனவும் இப்போதும் அப்படியான திட்டம் அவரிடம் உள்ளதாகவும் கூறி கடந்த பல நாட்களாக மாலை 5 மணி தொடக்கம் காலை 6 மணி வரை தனியான ஒரு சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.

அந்த சிறை அறைக்குள் மலம் கழிப்பதற்கு தட்டு ஒன்றும், சிறுநீர் கழிப்பதற்காக போத்தல் ஒன்றும் வழங்கப்படுகிறது. ஒரு சந்தேக நபருக்கு இவ்வளவு கொடுமைகள் நடத்தப்படுகிறது. இதனை எதிர்த்து தவரூபன் கடந்த 7 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வந்தபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 6 =

*