;
Athirady Tamil News

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் தேர்த்திருவிழா..!! (படங்கள்)

0

தெட்சண கைலாயம் என போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல்பெற்ற திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ திருக்கோணேஸ்வர பெருமானின் இரதோற்சவம் இன்று(15.04.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

விநாயகர், முருகப் பெருமானின் இரதங்கள் முன்னே செல்ல திருக்கோணேஸ்வர பெருமானின் இரத வலம் இடம்பெற்றது. இங்கு பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திகடன்களையும் நிறைவேற்றின்ர்.

நாளை காலை தீர்த்ததோற்சவம் பாவநாச தீர்த்தத்தில் இடம்பெறவுள்ளது.

படங்கள் – உதயரூபன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 12 =

*