;
Athirady Tamil News

வவுனியா நகரசபை; தவிசாளர் தமிழர் விடுதலை கூட்டணி கௌதமன், உப தவிசாளராக சுதந்திரக்கட்சி குமாரசுவாமி..! (படங்கள்)

0

????????????????????????????????????

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலை கூட்டணி கைப்பற்றியது!!

வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவு இன்று (16) காலை வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் எம். பற்றிக் ரஞ்சன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்குகளை வழங்கியிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நா.சேனாதிராஜாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றது இதனடிப்படையில் இ.கௌதமன் வவுனியா நகரசபை தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்ட இ. கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தனர்.

தமிழரசுக் கட்சியின் நா.சேனாதிராஜாவிற்கு ஐ.தே.கட்சியை சேர்ந்த கே.கருணாதாச ஆதரவளித்திருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து இருந்த போதிலும், விகிதாசார பட்டியலில் தெரிவானதும், அவரே இப்போது நகரசபை தலைவராக தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து வெற்றி ஈட்டி உள்ளதும்,

இவர் மட்டுமல்ல ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்ததுடன், இவர்களில் மூவரும் “தேசிய பட்டியல்” மூலமே தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

************************************

வவுனியா நகரசபையின் உப தவிசாளராக சுந்தரம் குமாரசுவாமி தெரிவு

வவுனியா நகரசபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் , உப தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆதரவாக 9 வாக்குகளும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு , ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தனர்.

*** இதனை தொடர்ந்து வவுனியா நகரசபையில் நடைபெற்ற வாய்த்தர்க்கம், மோதல் தொடர்பான.. மேலதிக செய்திகள், படங்கள், வீடியோக்கள் யாவும், “அதிரடி” இணையத்தின் நிருபர்களினால், இன்னும் சிறிதுநேரத்தில் “அதிரடி”யில் பதிவேற்றம் செய்யப்படும்….

** தொடர்புபட்ட செய்திகளுக்கு….

விடுதலைப் புலிகளின் பாணியிலேயே, வவுனியா நகரசபையை கைப்பற்றியது, ஈ.பி.ஆர்.எல்.எவ்! -நடந்தது என்ன?

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*