;
Athirady Tamil News

ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை, ரிசாட்டின் தம்பி கடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு!! (VIDEO)

0

????????????????????????????????????

ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை ரிசாட்டின் தம்பி கடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கே.கருணாதாச வாக்களித்ததுடன், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தம்பி றிப்கான் ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை கடத்தி சென்று ஆதரவாக வாக்களிக்கச் செய்ததாக குற்றஞ்சாட்டினார்.

வவுனியா நகரசபைக்கு தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இக்குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினர் றிப்கான் அக்குற்றச்சாட்டை முழுமையாக மறுத்ததுடன், “அப் பெண் வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக பாதுகாப்பு வழங்கியதாக” தெரிவித்தார்.

இக்குற்றச்hட்டு குறித்து குறித்த பெண் வேட்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

“என்னை யாரும் கடத்தவில்லை, என்னை வற்புறுத்தவில்லை, எனக்கு பாதுகாப்பு வழங்கியதன் காரணமாக நான் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தேன்” என தெரிவித்தார்.

*** தொடர்புபட்ட செய்திகளுக்கு….

வவுனியா நகரசபை; தவிசாளர் தமிழர் விடுதலை கூட்டணி கௌதமன், உப தவிசாளராக சுதந்திரக்கட்சி குமாரசுவாமி..! (படங்கள்)

விடுதலைப் புலிகளின் பாணியிலேயே, வவுனியா நகரசபையை கைப்பற்றியது, ஈ.பி.ஆர்.எல்.எவ்! -நடந்தது என்ன?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + eight =

*