;
Athirady Tamil News

வவுனியா நகரசபையை இழந்த கோபத்தில், த.தே.கூட்டமைப்பினர் களேபரம்!! (VIDEO)

0


வவுனியா நகரசபையை இழந்த கோபத்தில் த.தே.கூட்டமைப்பினர் களேபரம்!!

வவுனியா நகரசபையையானது கைவிட்டு போன நிலையில் த.தே.கூட்டமைப்பினர் தமது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், த.வி கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி கட்சியிரை தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டி தீர்த்தனர்.

வவுனியா நகரசபைக்கு வந்திருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன், தமிழரசுக்கட்சியை சார்ந்த ஒருவர் முரண்பட்டுக் கொண்டதையும் காணக் கூடியதாக இருந்தது.

இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து இருந்த போதிலும், விகிதாசார பட்டியலில் தெரிவானதும், அவரே இப்போது நகரசபை தலைவராக தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து வெற்றி ஈட்டி உள்ளதும்,

இவர் மட்டுமல்ல ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்ததுடன், இவர்களில் மூவரும் “தேசிய பட்டியல்” மூலமே தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

**** தொடர்புபட்ட செய்திகளுக்கு….

ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை, ரிசாட்டின் தம்பி கடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு!! (VIDEO)

விடுதலைப் புலிகளின் பாணியிலேயே, வவுனியா நகரசபையை கைப்பற்றியது, ஈ.பி.ஆர்.எல்.எவ்! -நடந்தது என்ன?

வவுனியா நகரசபை; தவிசாளர் தமிழர் விடுதலை கூட்டணி கௌதமன், உப தவிசாளராக சுதந்திரக்கட்சி குமாரசுவாமி..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + eight =

*