;
Athirady Tamil News

பாகிஸ்தானில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான பள்ளியில் இன்று வகுப்புகள் தொடங்கின..!!

0

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் சுமார் 30 ஆயிரம் மாற்றுப்பாலினத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றி அவர்களும் வாழ்வில் முன்னேற பாகிஸ்தானில் முதல் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

லாகூர் நகரில் ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட பள்ளியில் இன்று வகுப்புகள் தொடங்கியது. இப்பள்ளியில் இதுவரை 40 மாற்றுப்பாலினத்தவர்கள் சேர்ந்துள்ளனர். இங்கு சேர்ந்து படிக்க வயது வரம்பில்லை. சமையல், பேஷன் டிசைனிங் உட்பட 8 துறைகள் உள்ளன. அதனை கற்றுக்கொடுக்க 3 மாற்றுப்பாலினத்தவர்கள் உட்பட 15 ஆசிரியர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட முதல் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான பள்ளி இதுவாகும்.

மாற்றுப்பாலினத்தவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது சமூகத்தில் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 7 =

*