;
Athirady Tamil News

கெய்லின் அதிரடி எங்களுக்கு நல்ல செய்தி- மற்ற அணிகளுக்கு கெட்ட செய்தி – கேஎல் ராகுல்..!!

0

ஐபிஎல் தொடரின் 12-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. முதல் இரண்டு போட்டியில் களம் இறங்காத கிறிஸ் கெய்ல் நேற்றைய ஆட்டத்தில் களம் இறங்கினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 22 பந்தில் அரைசதம் அடித்து, ஐபிஎல் தொடரில் தனது 2-வது அதிவேக அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் குவித்தார்.

கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 8 ஓவரில் 96 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் 22 பந்தில் 7 பவுண்டரியுடன் 37 ரன்கள் அடித்தார். கெய்ல் எங்கள் அணிக்கு ஃபார்மோடு திரும்பியிருப்பது மற்ற அணிகளுக்கு மோசமான செய்தி என்று கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘கிறிஸ் கெய்ல் பந்தை சிறப்பாக அடித்து விளையாடுவது எங்கள் அணிக்கு மிகவும் சிறப்பானது. அதேவேளையில் மற்ற அணிகளுக்கு அது கெட்ட செய்தியாகும். தனி ஒரு மனிதனாக அணியை வெற்றி பெற வைப்பார் என்பது நமக்குத் தெரியும்.

அவருடைய நாளில் துவம்சம் செய்து விடுவார். இன்றும் (நேற்று) அதைத்தான் செய்தார். அவருடைய இந்த ஆட்டம் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − seven =

*