லண்டனில் தமிழ் இளைஞர் அடித்துக் கொலை குறித்த விவாதம்..! (வீடியோ)

லண்டனில் தமிழ் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார்!
தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார்.
தென்கிழக்கு லண்டனில் லூசியம் ஹை ஸ்ரிற்றில் உள்ள லூசியம் நூலகத்துக்கு அருகில் இடம்பெற்ற குழப்பத்திலேயே இவர் கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.
இக்கொலை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
நவம்பர் 10 சனிக்கிழமை இரவு 9:20 அளவில் லூசியம் ஹை ஸ்ரிற்றில் குழப்பம் இடம்பெறுவதாக பொலிஸ்க்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அங்கு 22 வயதுடைய இளைஞர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும் மறுநாள் ஞாயிறு அதிகாலை அவ்விளைஞர் மரணமானார்.
இச்சம்பவத்திற்கு சிலகாலம் முன்பாக லூசியம் சிவன் கோவில் தேர் இடம்பெற்ற போது இரு இளைஞர் குழுக்களிடையே மோதல் இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது.
சம்பவதினம் இடம்பெற்ற மோதல் அதன் தொடர்ச்சியாக இருக்கலாம் என அப்பகுதியில் வாழும் தமிழர்கள் நம்புகின்றனர்.