;
Athirady Tamil News

ஒடிசாவில் மேலும் ஒரு சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் – குற்றவாளி கைது..!!

0

ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் உள்ள நிலலிரி பகுதியில் கடந்த 13-ம் தேதி 4 வயது சிறுமியை ஒரு காமுகன் பாலியல் ஆசைக்கு பலியாக்கிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த சம்பவம் நடந்த மறுநாள் கடந்த 14-ம் தேதி இதே மாவட்டத்துக்கு உட்பட்ட கெரானா கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்ற 48 வயது நபர் அவளை தனிமையான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதுதொடர்பான தகவல் அறிந்த கிராம மக்கள் அந்நபரை சரமாரியாக அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்நபரை கைது செய்துள்ள போலீசார், சிறுமியர் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இவ்விரு கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஒடிசா மாநில சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*