;
Athirady Tamil News

குழந்­தை­யின் கழுத்­தில் கத்தி வைத்து மிரட்­டிக் கொள்ளை..!!

0

வீடு புகுந்த கொள்­ளை­யர்­கள் அங்­கி­ருந்த குழந்­தை ­யின் கழுத்­தில் கத்தி வைத்து மிரட்டி 15 பவுண் நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­த­னர். அங்­கி­ருந்து தப்­ப­முன்­னர் வீடு முழு­வ­தும் மிள­காய்த் தூள் தூவித் தப்­பிச் சென்­ற­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் இரவு அள­வெட்­டி­யில் நடந்­துள்­ளது.

அள­வெட்டி, மகாத்மா வீதி­யில் உள்ள வீடொன்­றி­ லேயே கொள்­ளைச் சம்­ப­வம் நடந்­துள்­ளது. இரவு 11 மணிக்­கும் 12 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் கொள்ளை நடந்துள்­ளது.

வீட்­டு­டன் இணைத்­துக் கட்­டப்­பட்­டி­ருந்த குளி­ய­லறை யன்­னல் ஊடாக 3 பேர் வீட்­டுக்­குள் நுழைந்­துள்­ள­னர். அவர்­கள் தலைக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­து­டன், முகத்­தைக் கறுப்­புத் துணி­யால் மறைந்­தி­ருந்­த­னர் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.

வீட்­டுக்­குள் நுழைந்­த­வர்­கள் அங்­கி­ருந்த குழந்தை ஒன்­றின் கழுத்­தில் கத்­தி­வைத்து வீட்­டி­லி­ருந்­த­வர்­களை மிரட்ட ஆரம்­பித்­துள்­ள­னர். சத்­த­மி­டக் கூடாது என்று அச்­சு­றுத்­தி­யுள்­ள­னர்.

அத­னால் வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் குரல் எழுப்­ப­வில்லை. குழந்­தையை வைத்து மிரட்­டி­ய­வாறு வீடு முழு­வ­தும் சல்­ல­டை­யிட்­டுத் தேடு­தல் நட­நத்­தி­யுள்­ள­னர்.

தாலிக்­கொடி, சங்­கிலி, மோதி­ரம் எனச் சுமார் 15 பவுண் நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­த­னர். அங்­கி­ருந்த தப்ப முன்­னர் வீடு முழு­வ­தும் தாம் கொண்டு வந்­தி­ருந்த மிள­காய்த் தூளைத் தூவி­விட்­டுச் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

கொள்ளை தொடர்­பில் தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் சம்­பவ இடத்­துக்கு வந்து நேற்று விசா­ர­ணை­களை நடத்­தி­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் இது­வரை எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*