;
Athirady Tamil News

காவிரியை வைத்து அரசியல் பிழைப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..!!

0

கர்நாடகாவைச் சேர்ந்தவர், தமிழ் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ். இவர், காவிரி பிரச்னை குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து:

தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போராக தண்ணீர் பிரச்னை நடந்து வருகிறது. வறட்சிக் காலத்தில் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் தண்ணீர் போராட்டம் வரத்தொடங்குகிறது.

தீயை அணைப்பது யார்?

இந்த போராட்டத் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடிகிறது. விவசாயிகள் வாழ்வாதாரமான காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. பல்வேறு நாடுகளுக்கு இடையிலான தண்ணீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒரே நாட்டில் இருக்கும் நம்மால் முடியவில்லை. இதற்கு ஓட்டு அரசியல் தவிர, வேறு காரணங்கள் இல்லை.
அரசுகள் கண்ணாமூச்சி

காவிரி பிரச்னை ஏதோ நீர் ஆதாரப் பிரச்னை மட்டுமல்ல, ஏழை விவசாயிகள் வாழ்வாதாரப் பிரச்னை. இதில் அரசுகள் கண்ணாமூச்சி காட்டுவது மக்களை ஏமாற்றும் செயல். காவிரியை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

ஒரே நதிநீரைக் குடித்து விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வது முறையல்ல. தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல. நதியில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − fifteen =

*