;
Athirady Tamil News

ஈரான் நாட்டில் சிக்கிய இந்திய மீனவர்கள்: மீட்க கோரி உறவினர்கள் மனு..!!

0

ஈரான் நாட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி,நெல்லை மீனவர்கள் நடுக்கடலில் படகில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு, உண்ண உணவு, உடை எதுவும் இன்றி இரண்டு மாதங்களாக அவதிப்படுவதாகவும், அவர்களை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த இளங்கோ, நிவேதன், ப்ரைட்மேன், சகாய அஜய், மற்றும் நெல்லை மாவட்டம் பெரியதாளையை சேர்ந்த பெலுகீஸ் பிரபு, சகாய ரென்ஸ் ஆகிய மீனவர்கள் பகரின் நாட்டில் மும்மது நாசர் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 12-2- 2018 அன்று ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த ஈரான் நாட்டு கடற்படையினர் அவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து கீஸ் என்ற தீவில் உள்ள துறைமுகத்தில் படகிலேயே சிறை வைத்துள்ளனர்.

ஆனால் இரண்டு மாதங்களாகியும் அவர்களுக்கு உன்ன உணவோ, உடையோ கொடுக்காமல் கடற்படையினர் துன்புறுத்துவதாகவும், அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தங்களது குடும்பங்களை காப்பற்றுவதற்காக ஈரானுக்கு சென்று தங்கி தொழில் செய்து தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தங்களது உறவினர்களை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + seven =

*