;
Athirady Tamil News

யாழில் பிரதேச சுத்திகரிப்பு பணிகள் தனியாரிடம்..!!

0

நெல்­லி­ய­டிப் பிர­தேச சுத்­தி­க­ரிப்­புப் பணி­கள் ,மண்­டா­னில் அமைந்­துள்ள திண்­மக் கழிவு சேக­ரிப்பு நிலை­யம், சபை­யின் நக­ரப் பணி­ம­னை­கள் சில­வற்­றின் பாது­காப்­புப் பணி­கள் ஆகி­ய­வற்றை தனி­யார் நிறு­வ­னங்­க­ளிடம் ஒப்­ப­டைப்­பது என்று கர­வெட்டி பிர­தேச சபை­யின் கன்­னி­ய­மர்­வில் தீர்­மா­னிக்கப்பட்டுள்­ளது.

கர­வெட்டி பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் தலை­மை­யில் கூடிய சபை­யின் கன்­னி­ய­மர்­வி­லேயே குறித்த விட­யம் தீர்­மா­ன­மாக எடுக்­கப்­பட்­டது. தீர்மா­னத்­தில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது;

சபை எல்­லைக்­குள் குப்பை கூழங்­களை அகற்­று­வது, நெல்­லி­யடி பிர­தேச சுத்தி­க­ரிப்பு ஆகிய பணி­களை மேற்­கொள்ள கர­வெட்டி பிர­தே­ச சபை­யில் 18 சுகா­தா­ரத் தொழி­லா­ளர்­களே உள்­ள­னர். அவர்­க­ளில் ஒரு­சி­லர் நகர சுத்­தி­க­ரிப்­புப் பணி­களை மேற்­கொள்­கின்­ற­னர்.

சுத்­தி­க­ரிப்­புத் தொழி­லா­ளர் சில­ரின் ஒழுங்­கான வர­வின்மை, அப்­ப­ணி­களை மேற்­கொள்ள தொழி­லா­ளர்­கள் முன்­வ­ராமை ஆகிய கார­ணி­க­ளால் நகர சுத்­தி­க­ரிப்­புப் பணி­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. கொழும்பு உள்­ளிட்ட பல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் நகர சுத்­தி­க­ரிப்­புப் பணி­கள் தனி­யா­ரி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. அதே­போல இங்­கும் சத்­தி­க­ரிப்பு பணி­களை தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைத்­தால் துப்­ப­ர­வுப் பணி­கள் சிறப்­பாக அமை­யும் என உறுப்­பி­னர்­க­ளால் சபை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

மண்­டா­னில் உள்ள திண்­மக் கழிவு சேக­ரிப்பு நிலை­யத்­தில் கண்­ட­கண்ட இடங்­க­ளில் திண்­மக் கழி­வு­ளைக் கொட்­டா­மல் பாது­காக்­க­வும், சபை­யின் சில பணி­ம­னை­க­ளில் பாது­காப்பை மேற்­கொள்­ள­வும் தனி­யார் நிறுவ­னங்­க­ளுக்குப் பொறுப்பை வழங்­கு­வதே பொருத்­த­மா­னது என்­றும் சபை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தத் தீர்­மா­னங்­களை சபை உறுப்­பி­னர்­கள் ஏக­ம­ன­மாக ஏற்­றுக்­கொண்­ட­னர்.

இதே வேளை நகர சுத்­தி­க­ரிப்­புப் பணி தனி­யா­ரி­டம் ஒப்­ப­டைக்­கும் போது நகர சத்­தி­க­ரிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்ள சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் கிரா­மிய சுத்­தி­க­ரிப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன் தீய­ணைக்­கும் பிரிவை முழு­மை­யாக அமைக்க முடி­யாத நிலை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­சபை போன்ற உப தீய­ணைப் பிரிவு ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தென்­றும், நெல்­லி­யடி பழைய சந்­தைக் கட்­ட­டத்தை உடைத்து புதிய சுப்­பர் மார்க்­கெட் ஒன்று அமைப்­ப­தென்­றும், பழைய கட்­ட­டத் தொகு­தி­யின் ஒரு புறத்­தில் வௌியூர், உள்­ளூர் சென்­று­வ­ரும் பயணி­கள் பொது­மக்­கள் வசதி கருதி சைக்­கிள் பாது­காப்பு நிலை­யம் ஒன்றை அமைப்­ப­தை­யும் தீர்­மா­ன­மாக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 14 =

*