;
Athirady Tamil News

ஆனந்தசுதாகரனை விடுதலைசெய்வதற்கான மனு கையளிப்பு..!! (படங்கள்)

0

ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்து, வடக்கு மாகாண அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் இட்ட மூன்று லட்சம் கையொப்பங்கள் அடங்கிய படிவங்களும், கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிப்பதற்கான மகஜரும் இன்று(17.04.2018) வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சருமான கலாநிதி.க.சர்வேஸ்வரன் அவர்களிடம் ஆனந்தசுதாகரனின் குழந்தைகளின் கைகளால் கையளிக்கப்பட்டன.

அங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் இக்குழந்தைகளின் தந்தையின் விடுதலைக்காக நாம் முழு முயற்சியுடன் பாடுபடுவோம். இங்கு ஒப்படைக்கப்பட்ட மூன்று லட்சம் கையெழுத்துகளும் மிகவும் பெறுமதி வாய்ந்தவை. இவை அனைத்தும் வடபுலத்து கல்விச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட பாரியதொரு முயற்சி. இதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்தமை பாராட்டுக்குரியது. என்று கூறினார்.

இக்கையொப்பம் கையளிக்கும் நிகழ்வில் கல்வி அமைச்சரின் பிரேத்தியேக செயலாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்களும், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி.சாந்தசீலனும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.செ.உதயகுமாரும், வடக்கு மாகாணத்தின் பன்னிரெண்டு வலயக் கல்விப் பணிப்பாளர்களும், வடக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகளும், வலயங்களின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தாய்ச்சங்க உறுப்பினர்களும், பிராந்திய தலைவர், செயலாளர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 6 =

*