;
Athirady Tamil News

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது…!! (படங்கள்)

0

????????????????????????????????????
காலை 10 மணிக்கு உள்ளுராட்ச்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் ஆரம்பமான சபை அமர்விலே அனைத்து கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

தவிசாளர் தெரிவுக்காக 2 உறுப்பினர்கள் போட்டி இட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ச.தணிகாசலம் 11 வாக்குகளை பெற்றார் அவருக்கு அவரது கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும்,ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக அளித்தனர் ,தமிழர் விடுதலை கூடடணியின் ஜெ.யெயரூபன் 11 வாக்குகளை பெற்றார் அவருக்கு அவரது கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும் சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர் பின்னர் திருவுள சீட்டு மூலம் தமிழ் கூட்டமைப்பின் ச.தணிகாசலம் தவிசாளராக தெரிவு செய்யப்படடார்.

பின்னர் உப தவிசாளருக்கான தெரிவில் மூவர் போட்டியிட்டிருந்தனர் தமிழர்
விடுதலை கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வன்,பொதுஜன பெரமுண சார்பில் க.விக்கிரமபால,தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நா.யோகராஜா ஆகியோர் போட்டி இட இருந்த நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியின் து.தமிழ்ச்செல்வன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.யோகராஜா 14 வாக்குகள் பெற்றார். அவருக்கு கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர் அடுத்து கா,விக்கிரமபால 6 வாக்குகளை பெற்றார். இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.யோகராஜா உப தவிசாளராக தெரிவு செய்யப்படடார்

முன்னர் தவிசாளர் தெரிவிலே நடுநிலைமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உப தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தது அதுபோல உப தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலை கூட்டணி நடுநிலைமை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் நடுநிலைமை வகித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைகலகலநாதன், சிவசக்தி ஆனந்தன், மஸ்தான் மாகாணசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம்,லிங்கநாதன், தர்மபால செனவிரத்னா, ஜயதிலக ஆகியோர் வவுனியா வடக்கு பிரதேசசபை தெரிவுக்கு பிரசன்னமாகியுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 12 =

*