த.தே.கூட்டமைப்பை பழி வாங்கவே த.வி.கூட்டணிக்கு வவுனியாவில் ஆதரவு- ஈ.பி.டி.பி..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பை பழி வாங்கவே தமிழர் விடுதலை கூட்டணிக்கு வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவில் ஈ.பி.டி.பி ஆதரவு வழங்கியதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.திலீபன் (17) தெரிவித்தார்.
வவுனியா நகரசபையில் நேற்றைய தினம் (16) நடைபெற்ற தவிசாளர் தெரிவில் ஈ.பி.டி.பி கட்சியானது த.வி.கூட்டணிக்கு ஆதரவு வழங்கி வாக்களித்து வெற்றிபெறச் செய்தது தொடர்பாக எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே மெற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட அமைப்பாளர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது யாழ்ப்பாணம் மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொண்டு ஆட்சி அமைத்ததுடன் நெடுந்தீவில் ஆட்சியமைப்பதில் த.தே.கூட்டமைப்பானது ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக முழுத்துரோகமான வேலையை செய்துள்ளனர்.
அதற்கு பழிவாங்கும் முகமாகவே வவுனியாவில் த.வி.கூட்டணியினருக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். மக்களுடன் மக்களுக்காக சேவையாற்ற ஈ.பி.டி.பி தொடர்ந்து பயணிக்கும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா