;
Athirady Tamil News

சட்டவிரோத மணல் அகழ்வு கிளாலியில் மீளவும் ஆரம்பம்..!!

0

கிளா­லி­யில் சட்­ட­வி­ரோ­த­மாக மணல் கடத்­து­வது இரண்டு வாரங்­க­ளா­கத் தடுக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும், அது மீண்­டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதி­கா­ரி­க­ளின் நட­வ­டிக்­கை­யால்­தான் இரண்டு வாரங்­க­ளும் தடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில் அது மீண்­டும் ஆரம்­பித்­துள்­ள­மைக்கு என்ன கார­ணம் என்­றும் பிர­தே­சத்­த­வர்­கள் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­னர். கிளி­நொச்சி மாவட்­டம் பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­சத்­தில் கிளா­லிப் பகு­தி­யில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணி­க­ளி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக தின­மும் மண்­க­டத்­தல் இடம்­பெ­று­கி­றது.

இது குறித்­துப் பிர­தேச மக்­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். அதி­கா­ரி­கள் எடுத்­துக்­கொண்ட நட­வ­டிக்­கை­யின் பய­னாக மண் அகழ்வு சில வாரங்­க­ளாக நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. தற்­போது மீண்­டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­ட­வி­ரோ­த­மாக மணல் ஏற்­று­ப­வர்­கள் நன்கு திட்­ட­மிட்டு மணல் கடத்­தும்­போது அதி­கா­ரி­க­ளும் நன்கு திட்­ட­மிட்டு தடுப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டும், ஆலோ­சனை கூற­வேண்­டும் என்று கோரு­கின்­ற­னர்.

இந்­த­நி­லைப்­பாடு குறித்­துக் கவலை தெரி­வித்­துள்ள பிர­தேச மக்­கள் மண் அகழ்­வால் பார­தூ­ர­மான பல பாதிப்­புக்­கள் ஏற்­ப­டு­கின்­றன என்­றும் சட்­ட­வி­ரோத மணல் கடத்­த­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­கின்­ற­னர். அதற்­குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − two =

*