;
Athirady Tamil News

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது..!! (படங்கள்)

0

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவுக்கான நிகழ்வு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு நெலுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில் நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக துரைச்சாமி நடராஜசிங்கம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 14 வாக்குகள் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட த.வி.கூட்டணியை சேர்ந்த த.சிவராசா 13 வாக்குகளை பெற்றிருந்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒரு ஆசனம் நடுநிலை வகித்திருந்த நிலையில் இருவர் வாக்களிக்கவில்லை.

உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகேந்திரன் 15 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எஸ்.குகதாசன் 14 வாக்குகளை பெற்pருந்தார்.

த.தே.கூட்டமைப்பு தெற்கு தமிழ் பிரதேசபையில் 11 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில் ஐக்கியதேசியக் கட்சியில் ஒருவரும் சுயேட்சையில் இருவருமாக ஆதரவு வழங்கியிருந்தனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 30 உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் வடக்கு மாகாண உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், சிவாஜிலிங்கம், கே.கருணாதாச முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − two =

*