கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!!

பயாகல, வெல்லவாய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
வேரகல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்தவர் தொடர்பில் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.