;
Athirady Tamil News

வெளி­நாட்டு பெண்ணை துஷ்­பி­ர­யோகம் செய்த 6 பேர் கைது..!!

0

வெலி­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மிரிஸ்ஸ பகு­தியில் வெளி­நாட்டு பெண் ஒரு­வரை பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தி­விட்டு அங்­கி­ருந்த ஒல்­லாந்து பிரஜை ஒரு­வரை தாக்­கி­ய­தாக கூறப்­படும் ‘ பீச் போய்ஸ்’ ஆறு பேரை சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒரு­வரின் சாட்­சி­யத்தின் படி இந்த ஆறு பேரையும் கைது செய்த பொலிஸார் அவர்­களை நீதி­மன்றில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இத­னி­டையே வெலி­கம – மிதி­கம கடலில் கடல் சறுக்கு விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த நான்கு இஸ்ரேல் பிர­ஜைகள் மீது தாக்­குதல் நடத்­திய சந்­தேக நபர்­களை கைது செய்ய தேடி வரு­வ­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

இந்த சம்­ப­வங்கள் குறித்து மேலும் அறிய வரு­வ­தா­வது,

கடந்த வாரம் மிரிஸ்ஸ பகு­தியில் 6 வெளி­நாட்டுப் பெண்கள் கூட்­டாக இருந்­துள்­ளனர். அவர்­க­ளுடன் ஒல்­லாந்தில் இருந்து வந்த பிரஜை ஒரு­வரும் நட்­புடன் இருந்து வந்­துள்ளார்.

இவர்கள் மிரிஸ்ஸ பகு­தியில் இரவு நேர களி­யாட்ட விடுதி ஒன்றுக்கு முன்­பாக கடற்கரை பகு­தியில் இருந்த போது, அப்­ப­கு­தியில் இருந்த பீச் போய்ஸ் சிலர் அவர்­களில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் ரீதி­யாக பலாத்­காரம் செய்­துள்­ளனர்.இதன்­போது ஒல்­லாந்து பிரஜை மீதும் அவர்கள் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே ஆறு பேர் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

இத­னை­விட மிதி­கம கடலில் கடல் சறுக்கு விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த போது இஸ்ரேல் பிரஜை ஒரு­வ­ருக்கும் அங்­கி­ருந்த உள்­நாட்­ட­வர்கள் சில­ருக்கும் இடையில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது.

இதன்போது அங்­கி­ருந்த இஸ்ரேல் பிர­ஜைகள் நால்வர் மீது தாக்­குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சந்தேக நபர்களைத் தேடி விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 13 =

*