;
Athirady Tamil News

காதலை தடுத்த தந்தையை, சுட்டுக்கொன்ற கொடூர மகள்..!

0


உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகளே தன் காதலருடன் இணைந்து சுட்டுக்கொன்ற கொடூரம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் ரொகேலா. டில்லியில் வேலை செய்து வந்தார். இவரது மகள் காவ்யா (23).

சமீர் அகமது என்பவருடன் காவ்யாவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

காவ்யா காதல் விஷயம், உறவினர்கள் மூலம் ராகேஷ் கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியடைந்தார்.

உடனே மகளை கடுமையாக கண்டித்தார். காதலனை சந்திக்க தடை போட்டார்.

சதி திட்டம்

ஆத்திரமடைந்த காவ்யா, தன் காதலனுடன் சேர்ந்து தந்தையை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.

இதையடுத்து, அன்றாட அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பிய ராகேஷை காவ்யாவும், அவர் காதலன் சமீர் அகமதுவும் இணைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

தகவல் அறிந்ததும், உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து, ரத்தவெள்ளத்தில் கிடந்த ராகேஷ் உடலை மீட்டனர்.

அங்கு பீதியுடன் பதுங்கியிருந்த மகள் காவ்யா, காதலன் சமீர் அகமது, கொலைக்கு துணை புரிந்த சமீர் நண்பர் ஷாதாப் ஆகியோரை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*