;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழாவும், பாராம்பரிய பொருட்களின் கண்காட்சியும்..!! (படங்கள்)

0

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவலல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட பண்பாட்டு விழா எதிர்வரும் 20.4.2018 ஆம் திகதி வெள்ளிக்கிழமைபிற்பகல் 2.00 மணிக்கு A9 வீதியில் (டிப்போ சந்திக்கு அருகாமையில்) அமைந்துள்ள மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வினை முன்னிட்டு பாரம்பரிய பொருட்கள், பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள், மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் என்பவற்றின் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 19.04.2018ம் திகதி காலை 9.30 மணிமுதல் குறித்த பயிற்சி நிலையத்தில் இடம்பெறும் எனவும் மாவட்ட பண்பாட்டு பேரவை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*