;
Athirady Tamil News

பூநகரியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன…!! (படங்கள்)

0

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் நேற்று(17) இரவு 37 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ஜம்பது இலட்சம் ரூபா என பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

பூநகரி பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பூநகரி சங்குப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது யாழ்பாணத்திலிருந்த புத்தளத்திற்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்ரிக் பொருள் சேகரிக்கும் தொழில் ஈடுப்படும் வானத்தின் மூலம் கடத்தப்பட்ட கேரள கஞ்சாவே கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 6 =

*