;
Athirady Tamil News

இறைச்சிக்காக ஆடுகளை கடத்தியவர்கள் கைது..!!

0

முந்தலம் – மதுரங்குளியில் அனுமதி பத்திரமின்றி ஆடுகளையும் ஏற்றிச் சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆடுகளை வவுனியாவில் இருந்து கட்டானவுக்கு இறைச்சியாக்குவதற்கு ஏற்றிச் சென்ற போதே ஆடுகள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர் எனக் கூறப்பட்டது.

இதன் போது 25 ஆடுகள் மீட்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 8 =

*