மேற்கு வங்காளத்தில் சூறாவளி காற்றில் 15 பேர் பலி..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று இரவு 7 மணியளவில் சூறாவளி காற்று வீசியது.
மணிக்கு 98 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் 45 நிமிட நேரம் இந்த சூறாவளி காற்று நீடித்தது.
சூறாவளியில் கட்டடம் இடிந்து விழுந்தது. 200 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் 7 பேரும், ஹெரா மாவட்டத்தில் 6 பேரும், பங்குரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிர் இழந்து உள்ளனர்.
இந்த சூறாவளி காற்றில் சிக்கி 15 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சுமார் 2 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.