;
Athirady Tamil News

இணையதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு..!!

0

கடந்த ஆண்டில் மட்டும் இணையங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக இணைய வாட்ச் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள இணைய வாட்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பானது (ஐ.டபுள்யு.எஃப்.) இணையதளங்களில் பதிவு செய்யப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் ஆபாச படங்களை நீக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உண்டு.

இந்நிலையில், ஐ.டபுள்யு.எஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும், கற்பழிப்பு மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற வீடியோக்கள் 33 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.டபுள்யு.எஃப். சி.இ.ஒ கூறுகையில், இது போன்ற வீடியோக்களை நீக்கும் பணியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.இருப்பினும் சில இணையதளங்களை நீக்குவது கடினமாக உள்ளது. இதில் ஐரோப்பியா முதல் இடத்தில் உள்ளது.

அதனைத்தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ரஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 13 =

*