;
Athirady Tamil News

72 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்த 19 வயது இளைஞர்…!!

0

அமெரிக்காவில் 72 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள 19 வயது இளைஞரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tennessee மாகாணத்தை சேர்ந்தவர் அல்மேடா (72) இவர் தனது 77 வயதான கணவரை கடந்த 2016-ல் பிரிந்துவிட்டார்.

அதன்பின்னர் ஒரு பிறந்தநாள் பார்டியில் கேரி ஹார்ட்விக் (19) என்ற இளைஞரை பார்த்த அல்மேடா அவருடன் நட்பாகியுள்ளார்.

இந்த நட்பானது பின்னர் இருவருக்குள் காதலாக மாற ஒருவரையொருவர் உயிராக நேசிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து அல்மேடாவும், கேரியும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்

முதலில் இதற்கு இருவர் குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்த நிலையில் பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டனர்.கேரிக்கும், அல்மேடாவுக்கும் இடையில் 58 வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அல்மேடாவுக்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ள நிலையில் இந்த உறவை ஏற்க முடியாமல் ஆரம்பத்தில் தவித்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதை ஏற்று கொண்டுள்ளனர்.

அல்மேடா கூறுகையில், காதலுக்கு வயதில்லை என்பது என் வாழ்க்கையில் நிரூபணமாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 7 =

*