;
Athirady Tamil News

வடக்கில் விடுப்பட்ட தொண்டராசிரியர்கள் நீதிகோரி பத்தரமுல்லையில்..!! (படங்கள்)

0

வடக்கில் பல வருடங்களாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றி தற்போது இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாது விடுவிப்பட்ட தொண்டராசிரியர்கள் பத்தரமுல்ல கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நீதி கோரி சென்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் சுமார் பத்து வருடங்களுக்கு மேல் தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்படவில்லை என்றும் இதில் பல ஆசிரியர்கள் ஏற்கனவே இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகளுக்கு சென்று வந்தவர்கள் என்றும் இருந்தும் இந்த நேர்முகத்தேர்வுக்கு இவர்களுக்கான கடிதங்கள் அனுப்பபடாததன் காரணமாக தங்களுக்கு நீதிகேட்டு மத்திய கல்வி அமைச்சின் அலுவலனத்திற்கு சென்றுள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகளுடன் சென்றுள்ளமை வேதனைகுரியது.

வடக்கு மாகாண சபை செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் தாங்கள் செய்ய முடியாது என தங்களுக்கு அறிவித்தமையினால் மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், உண்மையிலேயே இந்தப் பணிகளை வடக்குமாகாண கல்வி அமைச்சே பார்க்க வேண்டும என்றும் மத்திய கல்வி அமைச்சின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர்கள் அங்கு சென்றுள்ளதனை அறிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் பத்தரமுல்ல கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனை சந்தித்து இது குறித்து உரையாடிதோடு நீதி கோரி சென்றுள்ள தொண்டராசிரியர்களையும் சந்தித்துள்ளனர். இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் தாங்கள் விடுப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை திரட்டி அதன் உண்மைத் தன்மையினை அறிந்து உரிய நடவடிக்கையினை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

மாகாண சபைக்களுக்கான அதிகார பரவாக்கல் பற்றி தொடர்ந்தும் பேசி வருகின்ற வடக்கு மாகாண சபையினர் கல்வி விடயம் தொடர்பில் தங்களுக்கு உள்ள அதிகாரத்தையும் மத்திக்கு வழங்கி விட்டு தங்களை மத்திய அரசின் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டுள்ளனர் எனவும் தங்களின் தொண்டராசிரியர்கள் தெரிவுகள் நேர்முகத் தேர்வுகள் எல்லாம் மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் பத்தரமுல்லைக்கு சென்றுள்ள தொண்டராசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 6 =

*