;
Athirady Tamil News

மருதனார்மடத்தில் சிறுவர் களியாட்ட நிகழ்ச்சி..!! (படங்கள்)

0

மருதனார்மடத்தில் சிறுவர் களியாட்ட (கானிவல்) நிகழ்ச்சி – வலி.தெற்கு பிரதேசசபைத்தலைவர் க.தர்ஷன் திறந்து வைத்தார்.

மருதனார்மடம் பகுதியில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட களியாட்ட அரங்கினை (கானிவல்) வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேச சபைத்தலைவர் க.தர்ஷன் நாடாவை வெட்டி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேச சபையின் அனுமதியுடன் தனியார் நிறுவனம் ஒன்றினால் மருதனார்மடம் பகுதியில் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட களியாட்ட அரங்கு (கானிவல்) அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று 18.04.2018 புதன்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேச சபைத்தலைவர் க.தர்ஷன் அவர்கள் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு நாடாவை வெட்டி நிகழ்வினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். தவிசாளருடன் வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேச சபை உறுப்பினர் திருமுருகராஜன் மற்றும் பிரதேச மக்கள், சிறுவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்.

மேற்படி அரங்கில் செயற்கை நீச்சல்குளம், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், உணவகங்கள், பாதாளக்கிணற்றில் மோட்டார் ஓட்டும் சாகசம் எனப்பல அரங்குகள் அமைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + ten =

*