;
Athirady Tamil News

புத்தளத்தில் தாதியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு..!! (படங்கள்)

0

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று (புதன்கிழமை) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்ளுக்கு மேலாக கடமையாற்றி வந்த 15 தாதியர்களின் இடமாற்றத்தை வலியுறுத்தியே தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

எனினும் அவசரப் சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் தாதியர்கள் கடமையில் ஈடுபட்ட அதேவேளை, ஏனைய சிகிச்சைகள் மற்றும், வோர்ட் களில் தாதியர்கள் இல்லாமல் சுகாதார ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*