;
Athirady Tamil News

அன்னை பூபதியின் நாளில் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தவுள்ளோம்: செல்விமனோகர்..!!

0

அன்னை பூபதியின் நினைவுநாளில் தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை நடாத்த உள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான செல்விமனோகர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “தாயையும் தந்தையையும் பிரிந்து கதியற்ற நிலையில் உள்ள ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளுக்காக காந்திபூங்காவில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை நடாத்தவுள்ளோம்.

ஆனந்தசுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி கடந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் கையெழுத்துபோராட்டம் நடாத்தப்பட்டு ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தும், ஜனாதிபதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆனந்தசுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மீண்டும் போராட்டங்களை நடாத்தும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்போராட்டங்கள் ஜனாதிபதியினது கண்களை திறக்கவைக்கும் என்று நினைக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + eighteen =

*