;
Athirady Tamil News

தனிமையாக வாழ்ந்தவர் சடலமாக மீட்பு..!!

0

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ, ஹத்லாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் (19) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுனில் வனிகசேகர திஸாநாயக்க எனும் 59 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவதாகவும் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் நேற்று (18) அல்லது நேற்று முன்தினம் (17) நடத்திருக்கக்கூடும் எனவும் அத்துடன் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியே வராததனையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்த போது அவர் கீழே உயிரிழந்த நிலையில் கிடப்பதனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என கினிகத்தேனை பொலிஸாரும், ஹட்டன் கை ரேகை அடையாளப்பிரிவினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 17 =

*