;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!!

0

திக்வெல்லை, பதீகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக காணப்பட்ட முரண்பாடே இந்த கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திக்வெல்லை, பதீகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக திக்வெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*