;
Athirady Tamil News

உபியில் காலி ரெயில் பெட்டியில் தீப்பிடித்ததால் பரபரப்பு..!!

0

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் ஒரு காலி ரெயில் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் ஐட் என்னும் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரெயில் பெட்டி நேற்றிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தீயைணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அந்த பெட்டி காலியாக இருந்ததால் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − six =

*