;
Athirady Tamil News

நிர்மலா தேவி தொடர்பு கொண்ட மாணவிகளிடம் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கக்கூடாது – பெற்றோர்கள் வலியுறுத்தல்..!!

0

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியல் ரீதியாக அழைத்து பேசியதாக செல்போன் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அவர் அருப்புக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. முத்துசங்கர லிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

எஸ்.பி. ராஜேஸ்வரி அருப்புக்கோட்டையில் விசாரணையை தொடங்கினார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அவர்களை பேராசிரியை நிர்மலாதேவி பாலியலுக்கு அழைத்த மாணவிகளின் பெற்றோர் சந்தித்தனர். அப்போது மாணவிகளிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பரிசீலிப்பதாக சி.பி. சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 16 =

*