;
Athirady Tamil News

யாழில் முதல்தர சந்தையாக மருதனார்மடம் பொதுச்சந்தை மாறும்..!!

0

யாழில் முதல்தர சந்தையாக மருதனார்மடம் பொதுச்சந்தை மாறும்.
தலைவர் தர்சன் தெரிவிப்பு.

யாழ் மாவட்டத்திலே நவீன வசதிகளுடன் கூடிய முதல்தர அதிக வருமானம் ஈட்டுகின்ற சந்தையாக மருதனார்மடம் பொதுச்சந்தை எமது ஆட்சிக்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என வலிதெற்கு பிரதேச சபையின் தலைவர் க.தர்சன் தெரிவித்துள்ளார். பிரதேசசபையின் மருதனார்மடம் பொதுச்சந்தைக்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் களவிஜயம் செய்துள்ளார்.

இதன்போது பிரதேச சபையின் உடுவில் அலுவலக பொறுப்பதிகாரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், சந்தை மேற்பார்வையாளர், வருமானப்பரிசோதகர் ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வியாபரிகளுடனும் நுகர்வோருடனும் சந்தையின் மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடினார்.

யாழ் மாவட்டத்திலே அதிக வருமானத்தை ஈட்டுவதில் 2 ம் இடத்தில் இருக்கின்ற மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் சௌகரியமான வசதிகளோடு அமைக்கப்பட்டு யாழ்மாவட்டத்திலேயே முதல்நிலை பொதுச்சந்தையாக மருதனார்மடம் பொதுச்சந்தை மாற்றியமைக்கப்படும் எனவும் தவிசாளர் க.தர்சன் உறுதியளித்துள்ளார்.

இதன்போது கிணறு, மலசலகூடம் புனரமைத்தல் மற்றும் திண்மக்கழிவகற்றல் போன்றன உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும் வலிதெற்கு தவிசாளர் க.தர்சன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*