;
Athirady Tamil News

பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராமத்தினர்..!!

0

ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி சந்தான்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சத்யபாமா பேகரா சுய உதவிக்குழு ஒன்றை நடத்தி வந்தார். அக்குழுவில் சேரும் பெண்களின் குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டு அதனை சரி செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த செயல் கிராமத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடந்த சனிக்கிழமை சத்தியபாமாவை மின் கம்பத்தில் கட்டி கொடூரமாக தாக்கி உள்ளனர். இனி அடுத்தவர் பிரச்சனையில் தலையிடக்கூடாது எனவும் கூறி உள்ளனர். இதுகுறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து பேசிய சத்தியபாமா, நாங்கள் நீதி கிடைக்க வேண்டும் என போராடி வருகிறோம். இனியும் போராடுவோம் என கூறினார். பெண் தாக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + one =

*