;
Athirady Tamil News

பிரித்தானியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை எதிர்பார்ப்பு..!!

0

பிரித்தானியாவில் கடந்த 1949ஆம் ஆண்டுக்கு பிறகு வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்-ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் தற்போது மிதமான அளவில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளைக் காட்டிலும், பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில் வியாழன் அன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு முன்னதாகவே கோடைகாலம் தொடங்கிவிட்டது. இதனால், தென்கிழக்கு பகுதிகளில் வெப்பநிலையானது 26 டிகிரி, 27 டிகிரி அல்லது 28 டிகிரி செல்சியஸ்-ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நடந்தால், இந்த மாதம் தான் கடந்த 70 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்தானியாவில் உச்சபட்ச வெப்பநிலை மாதமாக இருக்கும். ஏனெனில், கடந்த 1949ஆம் ஆண்டு தான் பிரித்தானியாவில் அதிகபட்ச வெப்பநிலையாக 29.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு பதிவான 27.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையே இந்த மாதம் முறியடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரித்தானியாவில் ஏப்ரல் மாதத்தின் சராசரி வெப்பநிலை 11.4 டிகிரி செல்சியஸ் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 11 =

*