;
Athirady Tamil News

யாழ்.மாநகரசபையால் வீதிகள் புனரமைப்பு..!! (படங்கள்)

0

யாழ்.மாநகரசபையால் வீதிகள் புனரமைப்பு – துணைமேயர் மற்றும் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் பார்வையிட்டனர்.

அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்புச்செய்யும் வேலைகளை யாழ்.மாநகரசபையின் பொறியியற்பிரிவு ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரத்துக்குட்பட்ட சில வீதிகளும், ஒழுங்கைகளும் அண்மையில் பெய்த மழையால் கடும் பாதிப்படைந்துள்ளமை குறித்து, யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந்; மாநகரசபையின் மேயர் மற்றும் பொறியியற்பிரிவின் கவனத்துக்குக்கொண்டு வந்திருந்ததுடன், உடனடியாக புனரமைப்புகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கோண்டிருந்தார்.

இதனையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மாநகரசபையினரால் இரண்டாம் வட்டாரத்துக்குட்பட்ட பிறவுண் வீதி- கலட்டிச்சந்தி பகுதியில் வீதியில் காணப்பட்ட குழிகளை இட்டு நிரப்பி காப்பற் வீதி போல அமைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இச்செயற்படுகளை யாழ்.மாநகரசபையின் துணை மேயர் து.ஈசன் மற்றும் யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பொறியியற்பிரிவின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது மனித வலுவினை மட்டும் கொண்டு தார்க்கலவை தயாரிக்கப்படுவதால் வேலைகள்தாமதமடைகின்றன என்றும், இதுக்கான இயந்திர சாதனங்களை பெற்றுக்கொடுக்க முடியுமாயின் விரைவாக வேலைகளை முடிக்க முடியும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய தரப்பினரிடம் பேசி சாதகமான முறையில் பதிலளிக்கப்படும் என துணைமேயர் மற்றும் உறுப்பினர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − fourteen =

*